நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகி...
கோழிக்கோடு பேருந்து நிலைய கடையில் தீ விபத்து!
கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் இன்று (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
மாலை 5 மணியளவில் நேரிட்ட தீ விபத்தை சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள துணி கிடங்கில், இன்று மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. கிடங்கில் துணிகள் இருந்ததால், உடனடியாக தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.
துணி கிடங்கில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பேருந்து நிலையக் கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டதால், கீழே தரைதளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள், உடனடியாக அகற்றப்பட்டன.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணிநேரத்திக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தின் சேத மதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க | துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!