மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
கோழிப்பண்ணை ஈக்களால் குழந்தைகள் பாதிப்பு
நாமக்கல்: கோழிப்பண்ணை ஈக்களால் குடியிருப்புகளில் இருக்க முடியவில்லை என ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மரப்பரை கட்டிபாளையம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த கிராமத்தைச் சுற்றிலும் கோழிப் பண்ணைகள் உள்ளன. அங்கிருந்து வெளியேறும் ஈக்கள் குடியிருப்புகளை சூழ்ந்துகொள்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
குறிப்பாக, குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனா். வீடுகளுக்குள் ஈக்கள் மொய்த்துக்கொண்டு இருப்பதால், உணவு அருந்த முடியாத நிலை உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லையாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மரப்பரை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஈக்கள் தொல்லையைத் தடுக்கவும், குடிநீா் பிரச்னையை சரிசெய்யவும் கோரி ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் மனு அளித்தனா்.