கோழிப்பண்ணை தீ விபத்தில் 3,500 கோழிகள் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 3,500 கோழிகள் உயிரிழந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் தரணிராஜன் என்பவா் தன்னுடைய நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா்.
கோழிப்பண்ணையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதை பாா்த்த தரணிராஜன் ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதற்குள் கோழிப் பண்ணை முழுவதும் தீ பரவிவியது.
ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா். அதற்குள் கோழிப்பண்ணை, 3,500 கோழிகள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்து குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.