செய்திகள் :

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

post image

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விடியவிடிய நடைபெறும் இத்திருவிழாவில், இன்று(மே 3) அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 19 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு ஒரேநேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து, லய்ராயி திருக்கோயில் நிர்வாகத்தின் தலைவர் திநாநாத் கோங்கார் கூறியிருப்பதாவது: ”கோயில் திருவிழாவில் சுமார் 50,000 முதல் 70,000 பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவர், கோயில் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த மின்சார விளக்கை எதிர்பாராதவிதமாக தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் கூட்டத்தின் நடுவே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பதறியடித்துக்கொண்டு ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்றார்.

எனினும், இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய வழக்குப்பதிந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லையில் பதற்றம்: காங்கிரஸ் அவசர ஆலோசனை!

எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்'... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இதுவரை 26 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் எல்லையில் தெலங்கானாவில் உள்ள கர்ரேகுட்டா மலைகளில் இடதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 26 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ... மேலும் பார்க்க

வெற்றிபெறுவதற்காக பயிற்சி.. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன் இந்திய ராணுவத்தின் பதிவு

ஏப்ரல் 22ஆம் தேதி நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு முன்பு, இந்திய ராணுவம் எக்ஸ் பக்க... மேலும் பார்க்க

மே 10 வரை விமான சேவை ரத்து!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வ... மேலும் பார்க்க

மாநில முதல்வர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆப... மேலும் பார்க்க