Samantha: அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா நடிக்கிறாரா ? - பதில் சொல்கிறார் சமந...
வெற்றிபெறுவதற்காக பயிற்சி.. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன் இந்திய ராணுவத்தின் பதிவு
ஏப்ரல் 22ஆம் தேதி நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு முன்பு, இந்திய ராணுவம் எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கிய அழித்துள்ளது.
"प्रहाराय सन्निहिताः, जयाय प्रशिक्षिताः"
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 6, 2025
Ready to Strike, Trained to Win.#IndianArmypic.twitter.com/M9CA9dv1Xx
இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் 'தாக்குதலுக்குத் தயார், வெற்றிபெற பயிற்சி எடுத்திருக்கிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.