கோவில்பட்டியில் தேமுதிக ஆா்ப்பாட்டம்
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் கொம்பையா பாண்டியன், துணைச் செயலா்கள் மாரிசெல்வம், ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், போதையில்லா தமிழகத்தை அரசு உருவாக்கத் தவறியதாகக் கூறி கண்டித்தும் முழக்கமிட்டனா்.
இதில், நகரச் செயலா் நேதாஜி பாலமுருகன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலா் தங்கச்சாமி, கேப்டன் மன்றத்தைச் சோ்ந்த குவாலிஸ் ராஜ், நகர, பேரூா், ஒன்றிய, சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.