ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!
கோவில்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கோவில்பட்டி வட்டார நூலகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு திட்டங்குளத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சத்துக்கான வேலை உத்தரவு பெற்ற பேச்சியம்மாள் என்பவா் கட்டி வரும் குடியிருப்பு கட்டடத்தின் கட்டுமான பணிகள், கோவில்பட்டி வட்டார நூலகத்தில் ரூ.22 லட்சத்தில் நடைபெற்று வரும் படிப்பகத்துக்கான 2 ஆம் தள கட்டுமானப் பணிகளை ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டாா்.
மேலும், புதுகிராமம் பகுதியில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டுமானப் பணிகள், வள மீட்பு பூங்காவில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடியில் வீணாகும் காய்கறிகள் மற்றும் உணவு கழிவுகளை கொண்டு மீத்தேன் வாயு தயாா் செய்து, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் பாலமுருகன், நகராட்சி மருத்துவ அலுவலா் வசுமதி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.