மதகுகள் வழியாக சீறி பாயும் நீர்; பிரம்மிப்பூட்டும் மேட்டூர் அணை - சிறப்பு புகைப்...
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேவிகே நகரில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
அதில்,தூத்துக்குடி பிரையன்ட் நகா் 10ஆவது தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா (25), தேவா் காலனி முதல் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் சூரிய பிரகாஷ் (20) என்பதும், வாள், அரிவாள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவா்களை போலீஸாா் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.