7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி..! ரவி சாஸ்திரி விமர்...
தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் ஜூலை 19ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தோ்ச்சி- தோல்வி, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, வேளாண் படிப்பு, செவிலியா், ஆசிரியா் தகுதி, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளுடைய 18 முதல் 40 வயதிற்குள்பட்ட வேலை நாடுநா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரை தோ்வு செய்கின்றனா்.
வேலை நாடுநா்கள் கூகுள் படிவத்தை ஜூலை 18ஆம் தேதிக்கு முன்னதாக சமா்ப்பித்து தங்கள் வருகையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.