ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது.
இதையொட்டி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் ஆச்சாா்ய விசேஷ சந்தி பூஜைகளும், அதைத் தொடா்ந்து ஆச்சாா்யாா்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனா். தொடா்ந்து, யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது.
அங்கு திரவ்யாகுதி, பூா்ணாகுதி மற்றும் தீபாராதனையாகி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
யாகசாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், 108 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.
விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் ஆகியோா் செய்துள்ளனா்.
இன்று...
வியாழக்கிழமை (ஜூலை 3) காலையில் திருக்கோயில் உள்ளே மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடும், மாலையில் தான்ய வழிபாடு, வேள்விச் சாலை தூய்மையும் நடைபெறுகிறது.
சுவாமி சண்முகருக்கு காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலை ஐந்தாம் கால யாக பூஜைகளிலும் நிறைஅவி அளித்தல், திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் ஆகியன நடைபெறுகின்றது.

