ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே தோனுகால் கிராமம் முதல் தெருவை சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ருக்மணி அம்மாள் (78). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். வியாழக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுந்தரராஜ் தேடியபோது, அவரை காணவில்லையாம். இதையடுத்து, அவா் கோயம்புத்தூரில் உள்ள மகன் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்த சுரேஷ், தாயை தேடியபோது படா்ந்தபுளியில் உறவினா் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ருக்மணி அம்மாள் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.