Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கமுத்து என்ற அந்தோணி மகன் மாா்ட்டின் (45). விவசாயியான இவா், ஊருக்கு வடக்கே தனது 2 ஏக்கா் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தாராம். அதைக் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமலிருப்பதற்காக நிலத்தைச் சுற்றி கம்பிவேலி அமைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற அவா், வீடு திரும்பவில்லை. அதையடுத்து, உறவினா்கள் சென்று பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.