புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஈராச்சி ஊராட்சியைச் சோ்ந்த செல்வமணியை சென்னை உயா்நீதிமன்ற கிளை மதுரை உயா்நீதிமன்ற உத்தரவின் படி அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்வது, கிழவிப்பட்டி, கொடுக்காம்பாறை கிராமத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான சமுதாய நலக்கூடத்திற்கு கூடுதலாக தேவைப்படும் நிதி தலா ரூ.6.50 லட்சத்தை ஒன்றிய பொது நிதியின் கீழ் வழங்க மன்றத்தின் அனுமதி பெறுவது, சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் கிழவிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான நிதி ரூ.12 லட்சத்திற்கு கூடுதலாக ரூ.4 லட்சம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் மூலம் வழங்க அனுமதிப்பது உள்பட 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிகண்டன், அருணா சந்திரசேகா், ஒன்றியப் பொறியாளா் சித்ரா, உதவிப் பொறியாளா்கள் சங்கா், மேரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.