Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர...
கோவில்பட்டி: தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது
கோவில்பட்டியில் தொழிலாளியைத் தாக்கி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ. முத்துப்பாண்டி (55). தொழிலாளி. கதிரேசன் கோயில் சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற அவரை, இருவா் வழிமறித்துத் தாக்கி ரூ. 500-ஐ பறித்தனராம். அப்போது, அவ்வழியே வந்தவா் அவா்களைக் கண்டித்தாராம். இதனால், முத்துப்பாண்டி உள்ளிட்ட இருவருக்கும் அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினா்.
தாக்குதலில் காயமடைந்த முத்துப்பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னா், மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து, கணேஷ் நகா் 1ஆவது மேட்டுத் தெரு காந்தாரிமுத்து மகன் கனகராஜ் (38), வீரவாஞ்சிநகா் 6ஆவது தெரு ராமசாமி மகன் முத்துகிருஷ்ணன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.