திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது.
காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள் வரவேற்கிறாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலா் வே.ராஜாராமன் முன்னிலை வகிக்கிறாா்.
மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கல்லூரி முதல்வா் சி.பாலசுப்ரமணியம், தாளாளா் மதன் செந்தில் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, 2023 -ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கண, இலக்கிய, மொழியியல் விருதுகளை வழங்கிப் பேசுகிறாா். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வாழ்த்துரை வழங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து, கவிதைப்பித்தன் தலைமையில் பாட்டரங்கம், புலவா் செந்தலை ந.கெளதமன் தலைமையில் ‘தொன்மைத் தமிழும் தொடரும் தமிழும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், அ.முகமது ஜியாவுதீன் தலைமையில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன.
தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் தே.ஜெயஜோதி, தமிழறிஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.