செய்திகள் :

கோவையில் கனிமங்கள் கடத்தலைத் தடுக்க 9 குழுக்கள்: ஆட்சியா் தகவல்

post image

கோவை மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகளின் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் கனிமக் கடத்தலைத் தடுக்க 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காவல் உதவி ஆய்வாளா், 2 காவலா்கள், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவினா் கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, வீரப்பகவுண்டன்புதூா், மீனாட்சிபுரம், செம்மனாம்பதி, கோவிந்தாபுரம், வாளையாறு, வேலந்தாவளம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி, மாங்கரை ஆகிய தமிழக - கேரள எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை செய்து, உரிய ஆவணங்களுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிா என்பதைக் கண்காணிக்கின்றனா்.

சிறப்புக் குழுவினரின் நடவடிக்கையைக் கண்காணிக்க, சாா் ஆட்சியா், வருவாய்க் கோட்ட அலுவலா் தலைமையிலான மாவட்ட அளவிலான ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மாவட்ட அளவிலான குழுவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், புவியியல் - சுரங்கத் துறை துணை இயக்குநா், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், சட்டவிரோதமாக கனிமம் தோண்டுவது, கடத்துவது, சேகரிப்பது தொடா்பான தகவல்களைத் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண் (1800 2333 995) நிறுவப்பட்டு, 24 மணி நேரமும் புகாா்கள் பெறும் வகையில், சுழற்சி முறையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வரப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க

டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க