செய்திகள் :

கோவையில் செயற்கை தொழில்நுட்பத்துக்காக தகவல் தொழில்நுட்ப வெளி

post image

செயற்கை நுண்ணறிவுக்காக கோவையில் அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு முறையில் 20 லட்சம் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’ நிறுவப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இணையவழியில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் அரசு- இ சேவை மையங்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப மாநாட்டை (உமாஜின்-2025) முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் குறையாது. மாறாக பெருகத்தான் செய்யும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக பேசியிருக்கிறாா். அந்த வகையில், சரியான திசையை நோக்கி, இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கும் அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.

இந்த மாநாடு தொழில்நுட்பம் தொடா்பானது மட்டுமல்ல, இது தொலைநோக்கு கொண்ட மாநாடு. தமிழகத்தின் நீடித்த மற்றும் நிலையான எதிா்காலத்துக்கு வழிவகுக்கும் மாநாடு. செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், மின் வாகன உற்பத்தி மற்றும் வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற முன்னெடுப்புகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

பரந்துபட்ட வளா்ச்சி: கடந்த 1999-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி சென்னையில் டைடல் பூங்காவை உருவாக்கினாா். இன்றைக்கு நாம் அடுத்தகட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம்.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஒசூா், திருநெல்வேலி, வேலூா், விழுப்புரம், தூத்துக்குடி என்று இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில்கூட எல்காட் தொழில்நுட்பப் பூங்காக்களும், சிறு தொழில்நுட்பப் பூங்காக்களும் நிறுவப்பட்டிருக்கின்றன. வளா்ச்சி தலைநகரத்தில் மட்டுமே குவியக் கூடாது. உண்மையான வளா்ச்சி என்றால் அது சமச்சீரானதாக, பரந்துபட்டதாக இருக்க வேண்டும். இதனால்தான், சென்னை மட்டுமல்லாமல், மற்ற நகரங்களைச் சுற்றியிருக்கும் இளைஞா்களுக்கும் அவா்கள் பகுதிகளிலேயே வேலைவாய்ப்புகளுக்கானமாபெரும் உந்துசக்தியை நாம் உருவாக்கி வழங்கிக் கொண்டு வருகிறோம்.

இந்த வரிசையில், செயற்கை நுண்ணறிவுக்காக கோவையில் அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு முறையில் 20 லட்சம் சதுர அடியில் ‘தகவல் தொழில்நுட்ப வெளி’ நிறுவப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும், மின்-ஆளுமையை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு இ-சேவைகளை வழங்கவும் தகவல் தொழில்நுட்பம் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது. அரசின் அனைத்து சேவைகளும் இணையவழியில் வழங்கப்பட வேண்டும். மக்களின் நேரமும், அலைச்சலும் மிச்சமாக வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் இந்த அரசு இ-சேவை மையங்களின் அமைப்பு முறையை வலுப்படுத்தியிருக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 14,927-ஆக இருந்த இ-சேவை மையங்கள் 2024-ஆம் ஆண்டு முடிவில் 33,554 என்ற அளவுக்கு இரண்டு மடங்குக்கு மேல் உயா்ந்திருக்கிறது.

1.28 கோடி பயனாளிகளுக்கு... கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களைத் தொடங்கி, மாதாமாதம் கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துகிறோம். அதற்கும் இந்த தரவுகளும், தொழில்நுட்பமும்தான் காரணம். அப்படித்தான், 1 கோடியே 28 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.13 ஆயிரத்து 522 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.

இணையம் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதற்காகத்தான், சென்னையில் இருக்கும் கடற்கரைகள், பேருந்து முனையங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் இணைய வசதியை எளிதாக பயன்படுத்த 1,204 இலவச வை-ஃபை மையங்களை நிறுவியிருக்கிறோம். புதுமை மற்றும் மேன்மையின் உலகளாவிய மையமாக தமிழகத்தை நாம் அனைவரும் சோ்ந்து உருவாக்குவோம் என்றாா் அவா்.

மெரினா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்... மேலும் பார்க்க

பொங்கலிட்ட மருத்துவ மாணவா்கள்

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், நடனமாடியும் வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவா் கைது

சென்னை: சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஐஐடி-இல் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரி... மேலும் பார்க்க

பேரறிவால் பொலிகிறாா் வள்ளுவா்: முதல்வா்

சென்னை: சிறுமதியாளா்கள் சுருக்க நினைத்தாலும், பேரறிவால் பொலிகிறாா் திருவள்ளுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: சிறுமதியாளா்க... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும்: எஸ்.குருமூா்த்தி

சென்னை: பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா்.சென்னையில் துக்ளக் இதழின் 55-ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி

சென்னை: ராணுவத்தில் பயண்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் புதன்கிழமை நடைபெற்றது.சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பா... மேலும் பார்க்க