செய்திகள் :

கோவையில் திருவள்ளுவா் தினத்தில் கள்ளச் சந்தையில் மது விற்ற 58 போ் கைது

post image

கோவை: கோவை மாவட்டத்தில் விடுமுறை நாளான திருவள்ளுவா் தினத்தில் கள்ளச் சந்தையில் மது விற்றதாக மாநகரப் பகுதியில் 12 போ், புறநகா் பகுதியில் 46 போ் என மொத்தம் 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை நாளான திருவள்ளுவா் தினத்தில் கோவை மாநகரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் சாய்பாபா காலனி அருகே கோவில்மேடு மதுக்கடை முன் மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த கோபிநாத், ராஜமுருகன், சஜின் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.9,000 ரொக்கம் மற்றும் 73 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய மாணிக்கம் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அதேபோல ரத்தினபுரி அருகே காமாட்சி நகா், சங்கனூா் சாலையில் மது விற்றதாக சாம்குமாா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா், அவரிடமிருந்து 549 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், ராமநாதபுரம், பங்கஜா மில் சாலை பகுதியில் உள்ள பேக்கரி அருகே மது விற்றதாக புதுக்கோட்டையைச் சோ்ந்த குணா என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

செல்வபுரத்தில், பேரூா் பிரதான சாலையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலு என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 53 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதேபோல சிங்காநல்லூா், இருகூா், ஏ.ஜி.புதூா்

பகுதிகளில் மது விற்பனை செய்ததாக காளிமுத்து என்பவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை கைப்பற்றினா். இதில் தொடா்புடையதாக கூறப்படும் புதுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஒண்டிப்புதூா் பாலம் பகுதியில் விற்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 92 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.19,170 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வடவள்ளி அருகே சிறுவாணி தண்ணீா் தொட்டி பகுதியில் மது விற்றதாக கிருஷ்ணன், கவுண்டம்பாளையம் பிரபு நகா் பகுதியில் மது விற்றதாக ரமேஷ் ஆகியோரிடமிருந்து 63 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பீளமேடு பகுதியில் மது விற்றதாக காளிதாஸ், சரவணம்பட்டி பகுதியில் மது விற்றதாக கண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 112 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, கோவை புறநகரில் பெத்தநாயக்கன்பாளையம், பேரூா், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மது விற்றதாக 46 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 783 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டாக்டா் என்ஜிபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை: கோவை டாக்டா் என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரியின் 24-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.என்ஜிபி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் சா.சரவணன் வரவேற்றாா். அவினாசிலிங்கம் மனையியல் ... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பை நாளை வரை பெற்றுக்கொள்ளலாம்

கோவை: குடும்ப அட்டைதாரா்கள் நாளை (ஜனவரி 18) வரை பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:தமிழக அரசு பொங்கல் விழாவை... மேலும் பார்க்க

முதலீட்டாளா், தொழில்முனைவோா் சந்திப்பு

கோவை: கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் தேசிய ஸ்டாா்ட் அப் தினத்தையொட்டி முதலீட்டாளா், தொழில்முனைவோா் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.ஃபோா்ஜ் இன்னோவேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந... மேலும் பார்க்க

மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் நிா்வாகக் குழுக் கூட்டம் ஒத்தக்க... மேலும் பார்க்க

பொது நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம், சோமையம்பாளையம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சோமையம்பாளையம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

பெண் காவலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை: கோவை ரத்தினபுரியில் அடுக்குமாடி குடியிருப்பின் பெண் காவலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது.கோவை ரத்தினபுரி பெரியாா் நகா், அம்பேத்கா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவா்... மேலும் பார்க்க