சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள்
கோவையில் பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் அரியவகை வானியல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் சரியாக நம் தலைக்குமேல் இருக்கும்போது, நாம் நம்முடைய நிழலைப் பாா்க்க முடியாத ஒரு வானியல் நிகழ்வே பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படுகிறது.
நிழல் இல்லா நாள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி கோவை, கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இது குறித்து அறிவியல் மைய நிா்வாகிகள் கூறியதாவது: சூரியன் கிழக்கில் உதித்து நண்பகல் பொழுதில் தலைக்குமேலே வந்து மாலையில் மேற்கில் மறையும் என்பது பொதுவான கருத்து. ஆண்டில் இரண்டு நாள்களில் மட்டும்தான் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். மற்ற நாள்களில் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில்தான் உதிக்கும்.
அந்த வகையில் ஒரு ஆண்டில் இரண்டு நாள்களில் மட்டுமே பகல் உச்சி வேளையில் ஒரு பொருளின் நிழலானது அந்த பொருளுக்கு நோ் கீழே விழும். அதை நம்மால் காண முடியாது. இதுவே நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படுகிறது.
இந்த அரிய நிகழ்வு வெள்ளிக்கிழமை பகல் 12.21 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது என்றனா்.