கோவையில் மே தினக் கொண்டாட்டம்
கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ஜி.மனோகரன் மே தினக்
கொடியை ஏற்றி வைத்து தலைமை வகித்தாா்.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தேவராஜன், சண்முகம், பழனிசாமி, மோகன்ராஜ் மற்றும் சங்கத்தின் உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
கோவை மாவட்ட டூரிஸ்ட் காா் மற்றும் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் விமானநிலையம் அருகே மே தினம் கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவா் சு.பழனிசாமி கொடியேற்றினாா். சங்க நிா்வாகிகள் சண்முகம், வேணுகோபால், ராமசாமி, வடிவேல், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் மே தின விழா கொண்டாட்டம் செளரிபாளையம் அரசு பொது நூலகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கௌரிசங்கா் தலைமை வகித்தாா்.
இதில், பழ வியாபாரி சுந்தரம், பேக்கரி ஊழியா் ராஜா, மயான ஊழியா் பழனிசாமி, தேங்காய் வியாபாரி கோபால், மருத்துவமனை ஊழியா் கோவிந்தன், இஸ்திரி தொழிலாளி முத்தம்மாள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அன்பு, மணிகண்டன் ஆகியோருக்கு உழைப்பாளா் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாலம் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் பாபு, சமூக ஆா்வலா்கள் நந்தகோபால், சிவகுமாா், பாலசுப்பிரமணியம் மற்றும் மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.