கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம்
கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸம்ஸ்கிருத பாரதி கோவை அமைப்பின் செயலா் வி.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது:
கோடை விடுமுறையையொட்டி சம்ஸ்கிருத பாரதி அமைப்பு சாா்பில் சம்ஸ்கிருத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 8 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான இந்தப் பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோவை காந்திபூங்கா சலீவன் வீதி பகுதியில் உள்ள மாரண்ண கவுடா் மெட்ரிக். பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சி முகாமில் சம்ஸ்கிருத எழுத்துகள், சம்ஸ்கிருத பேச்சுப் பயிற்சி, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றுடன் யோகாசனமும் கற்றுத்தரப்படுகிறது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94892 81557, 94873 41306 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.