கோவை: கிணற்றில் தவறி விழுந்த 2 மான்கள் உயிருடன் மீட்பு
கோவை அருகே கிணற்றில் தவறி விழுந்த இரண்டு மான்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் கிணற்றில் வழி தவறி விழுந்தது. இது குறித்து தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
தகவலை அடுத்து தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி இரண்டு மான்களையும் உயிருடன் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவா்கள் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.