கோவை - தன்பாத் வாராந்திர ரயில் இன்று தாமதமாக இயக்கம்
சென்னை: கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தன்பாத் செல்லும் விரைவு ரயில் 8 மணிநேரம் தாமதமாக இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவை - ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் இடையே செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 03680) இயக்கப்பட்டு வருகிறது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, வழக்கமாக கோவையிலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) 8 மணி நேரம் 25 நிமிஷங்கள் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தன்பாத் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.