செய்திகள் :

கோவை மேம்பாலத்தில் கவிழ்ந்த எல்பிஜி டேங்கர் லாரி; பள்ளிகளுக்கு விடுமுறை... மீட்புப் பணி தீவிரம்..!

post image

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து  கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு ஒரு எல்.பி.ஜி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று அதிகாலை அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் செல்லும்போது ரவுண்டானா சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

கோவை எல்பிஜி டேங்கர் லாரி விபத்து

டேங்கரில் இருந்து தொடர்ச்சியாக வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினார்கள்.

தீயணைப்புத் தறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகரின் முக்கியமான சந்திப்பு என்பதால் போக்குவரத்து பாதிக்காத வகையில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேம்பாலத்துக்கு செல்லும் அனைத்து சந்திப்புகளும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டுள்ளன.

கோவை எல்பிஜி டேங்கர் லாரி விபத்து
கோவை எல்பிஜி டேங்கர் லாரி விபத்து

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காலை  3 மணியளவில் விபத்து நடைபெற்றுள்ளது. வாயு கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி ஐஓசிஎல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது.

கோவை எல்பிஜி டேங்கர் லாரி விபத்து

அதற்கு முன்பாக பம்ப் மூலம் வாயுவை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனர். ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.“ என்றார்.

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூல... மேலும் பார்க்க

இலங்கை: கிலோ கணக்கில் தொடர்ந்து சிக்கும் தங்கம்; `பாக் நீரிணை’ பகுதியும் தங்கம் கடத்தலும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்க கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந... மேலும் பார்க்க

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங... மேலும் பார்க்க

ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்

ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர். ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம... மேலும் பார்க்க

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க