செய்திகள் :

கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த VAO - சேஸ் செய்து பிடித்த போலீஸ்

post image

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்துள்ள தொம்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிருஷ்ணசாமி மத்வராயபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

வெற்றி

அங்கு பணியிலிருந்த கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் கிருஷ்ணசாமியிடம், ‘ரூ.3,500 லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் தர முடியும்.’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ணசாமியிடம் கொடுத்துள்ளனர். அவர் அந்தப் பணத்தை எடுத்துச்சென்று விஏஒ வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் வெற்றிவேலை கையும், களவுமாகப் பிடித்தனர்.

லஞ்சம்

இதை எதிர்பாராத வெற்றிவேல் காவல்துறையிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சித்தார். தன் இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்றவர், பேரூர் பெரிய குளம் அருகே இறங்கி ஓடியுள்ளார்.  

அப்போது கால் தடுக்கி லஞ்ச பணத்துடன் குளத்தில் விழுந்தார். தொடர்ந்து அப்படியே தப்பித்து செல்லவும் முயற்சித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரும் வெற்றிவேலை பின்தொடர்ந்தனர். அவர்களும் குளத்தில் குதித்து வெற்றிவேலைக் கைது செய்தனர்.

விசாரணை

வெற்றிவேலிடம் இருந்து பணத்தை மீட்டு, பேரூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி, பிறகு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kerala: மருத்துவமனையிலிருந்த உடல் உறுப்பு சாம்பிள்கள் மாயம்; வட மாநில இளைஞர் கைது; என்ன நடந்தது?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நோயாளிகளின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 17 உடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அந்த உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்தாலஜி டிப்பார்... மேலும் பார்க்க

கழிவுநீர் குழியில் விழுந்து குழந்தை பலி: "ஜல்லிக்கட்டுக்குக் காட்டும் ஆர்வத்தை.." -கொதிக்கும் மக்கள்

கழிவுநீர் குழியில் விழுந்து 4 வயது குழந்தை இறந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை விற்பனை; 7 பேர் கைது; வெளியான அதிர்ச்சி பின்னணி

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்குத் திருமணமாகி ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்... மேலும் பார்க்க

காதல் திருமணம்; தாலியை அறுத்தெறிந்த பெற்றோர்; உயிரிழந்த பெண் - காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி தமிழ்ப்பிரியா. இவர்களின் 21 வயது மகள் பூஜா. பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித... மேலும் பார்க்க

சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆச... மேலும் பார்க்க

``பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக... மேலும் பார்க்க