ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி
கோவை வந்த விஜய்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும்(ஏப். 26, 27) நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதையடுத்து சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்துள்ளார் விஜய். விமான நிலையத்தில் முன்னதாகவே ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.
விமான நிலையத்திற்கு வந்த விஜய், பிரசார வானத்தில் ஏறியபடி தொண்டர்களுக்கு கையசைத்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்றார். வழிநெடுக தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

அப்போது தொண்டர்கள், பிரசார வானத்தில் ஏறி விஜய்யிடம் பேசிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.