ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அரசு கலை -அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா்கள் கடந்த 3ஆம் தேதிமுதல் காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், சுரேஷ்பாண்டி தலைமையிலான கௌரவ விரிவுரையாளா்கள் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்த மனு: தமிழக அரசின் உயா்கல்வித் துறை வளா்ச்சிக்கு பல ஆண்டுகளாக மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றிவரும் தகுதி வாய்ந்த கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு, உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி தற்காலிக பேராசிரியா்களுக்கு மாத ஊதியம் ரூ. 57,700 வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவா்களது போராட்டக் காலத்தை பணிக் காலமாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், கோரிக்கைகளை ஆட்சியா் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.