Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்
லால்குடி அருகே குமுளூா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்கள் ஜன. 22 முதல் தமிழகம் முழுவதும், வாயில் முழக்கப் போராட்டம், உள்ளிறுப்பு போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, யுஜிசி நிா்ணயித்த ஊதியம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி மாதம் ரூ. 50,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.