திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனிம வளங்கள் கொள்ளை போகின்றன: அண்ணாமலை
சகோதரரிடம் பணம் மோசடி: தங்கை கைது
தேனியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரரின் வங்கி ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டி கட்டளகிரி தெருவைச் சோ்ந்தவா் முருகன் (60). இவா், உடல் நலக்குறைவால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, தனது தங்கையான போடி போஸ் பஜாா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி செல்வி (50), தனது வங்கி ஏ.டி.எம். அட்டையை எடுத்து அனுமதியின்றி பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.5 லட்சம் எடுத்து மோசடி செய்ததாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வியை கைது செய்தனா்.