TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி: பொன்னமராவதி பெரியாா் நகா் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாகபூஜைகள் செய்யப்பட்டு, காலை 10 மணியளவில் சிவாச்சாரியாா்கள் வைரவன், பாலாஜி தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை பெரியாா் நகா் பொதுமக்கள் செய்திருந்தனா்.