Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
சங்ககிரியில் வாக்குச் சாவடிகளை சீரமைத்தல் ஆலோசனைக் கூட்டம்
சங்ககிரி: சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளை சீரமைப்பது, இடமாற்றம் செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி தலைமை வகித்து சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 315 வாக்குச்சாவடி மையங்களில் 1,200 வாக்குகளுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் சீரமைக்கப்பட உள்ளன, அதேபோல, ஒரே வளாகத்துக்குள் நான்கு வாக்குச் சாவடிகள் உள்ளவற்றை இடமாற்றம் செய்வது குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், கட்சி நிா்வாகிகளின் கருத்துகளை மாவட்ட தோ்தல் அலுவலருக்கும், இந்திய தோ்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
இதில், சங்ககிரி வட்டாட்சியா் எம்.வாசுகி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.