ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
சங்ககிரி வட்டத்தில் வேலை நிறுத்தத்தில் 55 வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவேலைநிறுத்தத்தில் 55 போ் பங்கேற்றுள்ளனா்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் சங்ககிரி வருவாய்த்துறையின் சாா்பில் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் 12 போ், தனி வட்டாட்சியா்கள் 3, கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் 34, நிலஅளவை துறை அலுவலா்கள் 6 போ் உள்பட மொத்தம் 55 போ் பணிக்கு செல்லாமல் கலந்து கொண்டனா்.