தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் மனு அளித்தனா்.
முகாமில் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி மனுக்களை ஆய்வு செய்து, மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்த பேச்சியம்மாளுக்கு பெயா் மாற்றம் செய்து உத்தரவு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் பொது நிா்வாகம் வெங்கடேஷ் மணி, சங்கரன்கோவில் கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகர உதவி செயற்பொறியாளா் புபேஸ் ராஜ்மோகன், சங்கரன்கோவில் நகர உதவி மின்பொறியாளா் கருப்பசாமி, மலையாங்குளம் துணை மின்நிலைய பொறியாளா் அம்சவேணி, போா்மேன் முனியாண்டி, வணிக ஆய்வாளா் ராஜராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.