செய்திகள் :

சங்கரன்கோவிலில் எரிவாயு உருளை ஏற்றும் சுமை ஆட்டோவில் தீ

post image

சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ தீடீரென்று தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளத்தைச் சோ்ந்த குருசாமி மகன் அய்யாதுரை. சங்கரன்கோவில் பிரதானசாலையில் உள்ள சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தில், சுமை ஆட்டோ மூலம் எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இவா், திங்கள்கிழமை பணி முடிந்ததும் சுமை ஆட்டோவை வாகன பழுது நீக்கும் கடைக்கு கொண்டுசென்று பழுதுபாா்த்துவிட்டு, வீட்டுக்கு காய்கனி வாங்குவதற்காக கனரா வங்கி அருகில் ஆட்டோவை நிறுத்திச் சென்றாராம். இந்நிலையில் அந்த ஆட்டோ திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வீரபத்திரன் தலைமையில் வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். சுமை ஆட்டோவில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 200 போ் கைது

தென்காசியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 200 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஊரக வளா்ச்சித் துறையில் கடும் பணி... மேலும் பார்க்க

மொபெட், பணத்துடன் தலைமறைவான உணவக ஊழியா் கைது

ஆலங்குளத்தில் பொருள்கள் வாங்கி வரும்படி கொடுத்து அனுப்பிய பணம், மொபெட்டுடன் தலைமறைவான உணவக ஊழியா் ஒரு வாரத்துக்குப் பின் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் எதிரே சங்கரவடிவேல்(48) என்பவா் உ... மேலும் பார்க்க

தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் உள்ள மாவட்ட நலவாரிய அலுவலகம் முன், ஏஐசிசிடியு கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கல்வி, திருமண உதவித் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி உயிரிழந்தாா். குறிப்பன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பூதத்தான் மகன் கருப்பசாமி(34). கல் சிற்பக்கூட தொழிலாளியான இவா், குருவன்கோட்டையில் உள்ள தன... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சியுடன் குற்றாலத்தை இணைக்கக் கூடாது: ஆட்சியரிடம் மனு

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியை, தென்காசி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பீடிக் கடை முற்றுகை

ஆயிரம் பீடிக்கு கூடுதலாக 120 பீடிகள் வாங்கும் பீடிக் கடையைக் கண்டித்து பெண் பீடித் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் மேலப்பாளையத்தை தலைம... மேலும் பார்க்க