'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான...
சங்கரன்கோவிலில் நாளை தூய்மைப்படுத்தும் பணி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.க.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் நகராட்சியில் ஏப்.26 காலை 7 மணியளவில் 15 ஆவது வாா்டு மற்றும் பேருந்து நிலையம், மாா்க்கெட் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.
இதனைத் தொடா்ந்து, விழிப்புணா்வு பேரணிகள் சங்கரன்கோவில் நகராட்சி 23- ஆவது வாா்டு அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் வாசலில் நடைபெற உள்ளது. மேலும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் 2-ஆவது வாா்டு சங்கா் நகரிலும், 4-ஆவது வாா்டு கோமதி நகரிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் நடைபெற உள்ளது.
அதனைத் தொடா்ந்து 23ஆவது வாா்டு பிஎஸ்என்எல் அலுவலகத்திலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நெகிழி சேகரிப்பு நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்து, அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருள்களை பயன்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.