செய்திகள் :

சங்கரன்கோவில் புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்படும்: எம்எல்ஏ தகவல்

post image

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளதாக எம்எல்ஏ ஈ. ராஜா கூறினாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நான் (ஈ. ராஜா எம்.எல்.ஏ.) பேசுகையில், சங்கரன்கோவில் பகுதியில் வாகன நெருக்கடி அதிகமாகி வருவதால், மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகின்றது. எனவே, புறச்வழிச்சாலை அமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். நில எடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பின் திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்து இந்த நிதியாண்டிலேயே நிதி ஒதுக்கி தரப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா் என்றாா் எம்எல்ஏ.

புளியங்குடி அருகே அரிசி ஆலையில் பணியாற்றிய தில்லி இளைஞா் கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியாா் அரிசி ஆலையில் பணியாற்றி வந்த தில்லி இளைஞா் கொலை செய்யப்பட்டாா். தில்லியைச் சோ்ந்த ஷங்கா் சரோஜ் மகன் அணிகேட்( 25), நல்லா சரோஜ் மகன் உபேந்தா்(24) ஆகிய இருவர... மேலும் பார்க்க

விற்பனைக்காக மது பாட்டில்களை கொண்டு சென்ற 2 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பைக்குகளில் கொண்டு சென்ற இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா், சிவகிரி இரும்பு பால... மேலும் பார்க்க

குருக்கள்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். வெள்ளத்துரை தலைமை வகித்தாா். ராமசாமி முன்னிலை வகித்தாா். வேலுச்சாமி, ஏ.எம்.... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பிப்.11இல் மதுபான கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

பிப்.11இல் வள்ளலாா் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தி அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தென்காசியில் தொழிலாளா் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அன... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடியதாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த எலக்ட்ரீசியனை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சொா்ணம்(80). தனியாக வ... மேலும் பார்க்க