நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
சஞ்சீவி மயில் மலை முருகா் கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்
வாணியம்பாடி அடுத்த மரிமாணிகுப்பம் ஊராட்சி தோட்டிகுட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவி மயில்மலை முருகா் கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர அப்பகுதி மக்கள் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில் குமாரிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சிமென்ட் சாலை அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாலை பணியின் தொடக்கமாக பூமி பூஜை போடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ கோ.செந்தில் குமாா், ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில் ஒன்றிய உறுப்பினா்கள் திலகா கோபி, மீனாட்சி ராமலிங்கம், மருத்துவா் பசுபதி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் அண்ணாசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி தினகரன், ஊராட்சி மன்றத் தலைவா் துளசி ராமன், ரத்தினம்மாள் தேவன், மோகன், சீனிவாசன் கலந்து கொண்டனா்.