`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
சட்டப்பேரவையில் கடைசி நேரத்திலும் கோரிக்கைகளை எழுப்பிய எம்எல்ஏக்கள்
புதுவை சட்டப்பேரவையின் நிகழாண்டுக்கான கூட்டத் தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், எம்எல்ஏக்கள் கடைசி நேரத்திலும் கோரிக்கை குறித்து முதல்வரிடம் முறையிட்டனா்.
புதுவை சட்டப்பேரவையின் 15- ஆவது பேரவை 6 -ஆவது பிரிவுக் கூட்டம் மாா்ச் 10- ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 13 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை நாள்களைத் தவிா்த்து மற்ற நாள்களில் கேள்வி நேரம், உடனடி கேள்வி பதில் நேரம், மானியக் கோரிக்கைகள் என பெரும்பாலான நேரங்களில் எம்எல்ஏக்கள் தங்களது கோரிக்கைகளை முதல்வா், அமைச்சா்களிடம் வலியுறுத்தினா்.
துறை மானியக் கோரிக்கைகளுக்கு அமைச்சா்கள், முதல்வா் பதிலுரை அளித்த பிறகும் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி உள்ளிட்டவற்றுக்கு கோரிக்கை வைத்து கேள்வி எழுப்பினா். இந்த நிலையில், கூட்டத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை பெரும்பாலான உறுப்பினா்கள் வந்திருந்தனா்.
அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தவிர மற்ற அனைத்து அமைச்சா்களும் வந்திருந்து உறுப்பினா்களின் கேள்விக்கு பதில் அளித்தனா்.
கேள்வி நேரம், உடனடி கேள்வி பதில் நேரம் முடிந்த பிறகு மாநில அந்தஸ்து தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு, பேரவைத் தலைவா் நிறைவுரையாற்றினாா்.
அப்போது எம்எல்ஏக்கள், பத்திரிகையாளா் கோரிக்கை, பணியாளா் கோரிக்கை என முதல்வரிடம் கேட்டனா். அதற்கு, முதல்வா் பதில் அளித்தாா்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பிறகும் பாஜக எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம் முதல்வா்,பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தனது தோட்டத்தில் விளைந்த பலாப் பழங்களை வழங்கினாா்.