Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | El...
``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..'' -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவில் ஏற்கெனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபரின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களையும் அந்நாட்டு ராணுவம் இந்தியாவுக்கு நாடு கடத்தியிருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு ராணுவம் நாடு கடத்த விமானத்தில் ஏற்றுகையில் அவர்களின் கை கால்களில் விலங்கிட்டு அழைத்துச் சென்ற வீடியோவை, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை (USBP) வெளியிட்டது, இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. USBP-ன் தலைமை அதிகாரி மைக்கேல் W. பேங்ஸ் (Michael W. Banks), எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் இந்தியர்களின் முகம் காட்டப்படவில்லை.
இருப்பினும், மைக்கேல் W.பேங்ஸ் தனது பதிவில், ``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸை USBP வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திருப்பியனுப்பியது. அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தொலைதூர நாடுகடத்தல் இது. குடியேற்றச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை விரைவாக அகற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் எங்களின் உறுதிப்பாட்டை இந்தப் பணி குறிக்கிறது. சட்டவிரோதமாகக் குடியேறினால் நீங்கள் அகற்றப்படுவீர்கள்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த இந்தியர்கள் பலரும், "இது அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற செயல்" எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.