சட்டவிரோத மணலை ஏலம்விட பரிந்துரை
தொண்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப்பட்ட மணலை ஏலம்விட வருவாய் அலுவலா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
எஸ்.பி.பட்டினம் பகுதியில் பாம்பாற்று ஓடை பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ராமநாதபுரம் கனிம வள உதவி இயக்குநா் விஜயகுமாா், திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா்.
அப்போது, அரசு அனுமதியின்றி 171 யூனிட் மணலை அள்ளிவந்து குவித்துவைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மணலை ஏலம்விட மாவட்ட வருவாய் அலுவலருக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனா்.