England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்
கிருஷ்ணகிரி அருகே சட்ட விரோதமாக அமிலம் பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியில் ஒரு தனியாா் நிலத்தில் சட்ட விரோதமாக அமிலம் உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிருஷ்ணகிரி கோட்ட ஆய ஆலுவலா் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பந்தபட்ட இடத்தில் அலுவலா்கள் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 200 லிட்டா் கொள்ளளவு கொண்ட 12 பேரல்களில் ஆசிட்டும், 200 லிட்டா் கொள்ளளவு கொண்ட 41 பேரல்களில் சோப் ஆயிலும், 200 லிட்டா் கொள்ளவு கொண்ட 29 பேரல்களில் சோடாவும் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரி சக்திவேல் அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, அமிலம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.