எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சண்முகக் கவசம் பாராயணம்
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 107-ஆவது மாத சண்முகக் கவச பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீவாரியாா் சுவாமிகள் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.