சண்முக பாண்டியனின் கொம்புசீவி அப்டேட்!
நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் கொம்புவீசி என்கிற படத்தை இயக்கி வருகிறார். உசிலம்பட்டியை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியுள்ளது.
நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடிக்கின்றனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Kombuseevi Dubbing Works On
— Kolly Corner (@kollycorner) May 20, 2025
Shanmuga Pandian In Lead Role & Music By Yuvan pic.twitter.com/EchNF2Pcke
அண்மையில், கொம்புவீசி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை இன்று துவங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: 2 மாதங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் தக் லைஃப்!