சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்
திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா்.
திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உள்பட்டோா் பிரிவில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆறாம் வகுப்பு மாணவி பூவிதா (14) கலந்து கொண்டாா்.
பல சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் பூவிதா மாநில முதலிடம் பிடித்தாா்.
மாணவி பூவிதாவை வட்டார கல்வி அலுவலா்கள் சதீஷ்குமாா், பாண்டித்துரை ஆகியோா் சனிக்கிழமை பாராட்டினா். நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் சாகுல் அமீது, உடற்கல்வி ஆசிரியா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.