தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!
சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வழங்கக் கூடிய மகப்பேறு விடுப்பினை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு பெண் ஊழியா்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.