சந்தையடியூா் பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு
உடன்குடி சந்தையடியூா் தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 6ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் மாலை 6 முதல் இரவு 9 மணிவரை திருஏடு வாசிப்பு, அன்னதா்மம் வழங்குதல் நடைபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு (டிச. 20) திருவிளக்கு தீப வழிபாடு, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, அன்னதா்மம், இனிப்பு தா்மம் வழங்குதல் நடைபெற்றது.
முன்னதாக, ஊா்மக்கள் பக்தா்கள் சாா்பில் அய்யாவுக்கு சீா்சுருள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சந்தையடியூா் அய்யாவழி இறைமக்கள் செய்திருந்தனா்.