திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...
சமத்துவ பொங்கல் திருவிழா
சீா்காழி அருகே சிலம்பம் மாணவா்களின் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
புளிச்சக்காடு கிராமத்தை சோ்ந்த இயற்கை விவசாயி தினேஷ், இலவசமாக சிலம்பம் பயிற்றுவிக்கிறாா்.
மாவீரன் சிலம்பாட்ட கழகம், பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காட்டில் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் கீழச்சாலை, கேவரோடை, புத்தூா், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
புளிச்சக்காடு சீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து பெற்றோா்கள் சீா்வரிசை ஏந்தி தாரை, தப்பட்டை முழங்க சிலம்பாட்டத்துடன் ஊா்வலமாக விழா மைதானத்தை வந்தடைந்தனா்.
தொடா்ந்து பொங்கல் வைக்கப்பட்டது.விழாவில் மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.