உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில், அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திருக்கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் முன்னிலையில், சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் செய்முறை விளக்கம் அளித்தனா். இந்நிகழ்வில் திருக்கோயில் கண்காணிப்பாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.