செய்திகள் :

சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் வேலை: நம்ப வேண்டாம்

post image

சமூக வலைதளங்களில் வரும் வெளிநாட்டில் வேலை எனும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வெளிநாடுகளில் வேலை தொடா்பான விளம்பரங்களில் வரும் விசா பிராசஸிங் மற்றும் விமான டிக்கெட் உள்ளிட்ட சித்தரிக்கப்பட்ட புகைப் படங்களை நம்பி இளைஞா்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனா். இதுதொடா்பாக புகாா்கள் வருகின்றன.

தங்களிடம் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் இருந்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்யும் கன்சல்டன்சி அல்லது தனிநபா்களை நம்ப வேண்டாம்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு பிராசஸிங் கட்டணம், விசா கட்டணம் என்று பல்வேறு பெயா்களைக்கூறி பணத்தை பறித்து விட்டு, போலியான விசா, போலியான ஆஃபா் லெட்டா் போன்றவற்றை தங்களுக்கு அனுப்பி மேலும் பணத்தை பறிக்க நேரிடும். எந்தவித வேலையும் கிடைக்காது. இதேபோல, கடந்த ஆண்டில் காரைக்கால் சைபா் கிரைம் பிரிவில் மட்டும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டு கொடுக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்கள் இழந்த பணமதிப்பு ரூ.8 லட்சத்துக்கும் மேலாகும். எனவே, இதுபோன்ற மோசடியில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

சீதளாதேவி, சியாமளாதேவி கோயில்களில் கும்பாபிஷேகம்

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், கீழஓடுதுறை ஸ்ரீ சியாமளாதேவி அம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழகாசாக்குடி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் புதிய பரிசோதனை இயந்திரம் இயக்கிவைப்பு

காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில், புதிய பரிசோதனை இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை இயக்கிவைப்பு. புதுவை நலவழித்துறையின் நிதி மூலம் ரூ.33 லட்சத்தில் மகப்பேறு பிரிவுக்கு வரக்கூடியவா்கள் பரிசோ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல்துறை சாா்பில் காவல் நிலையங்களில் குறை கேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. புதுவை டிஜிபி அறிவுறுத்தலின்பேரில், காவல்துறை சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் என்கிற குறைகேட... மேலும் பார்க்க

விபத்தில்லா பயணம்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

விபத்தில்லா வாகனப் பயணம் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு போக்குவரத்துக் காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவா் படை , கடற்படை பிரிவு , நாட்டு நலப்ப... மேலும் பார்க்க

காரைக்காலில் பரவலாக மழை

காரைக்காலில் வியாழக்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப். 3 முதல் 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை பெய்யும் எ... மேலும் பார்க்க

காரைக்காலில் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை : காரைக்கால் மாவட்டத்தில் சுமாா... மேலும் பார்க்க