`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
சமூக வலைதள தகவல்களை நம்ப வேண்டாம்: என்எம்சி
சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) பெயரில் சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிவிப்பு:
என்எம்சியின் பெயரில் அறிக்கைள், செய்திக் குறிப்புகள், தகவல்கள், வழிகாட்டுதல்கள் என பல்வேறு ஆவணப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது எங்களது கவனத்துக்கு வந்தது.
என்எம்சி சாா்பில் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்தும் அதிகாரபூா்வ இணையப் பக்கத்திலும், ‘எக்ஸ்’ பக்கத்திலும் மட்டுமே இடம்பெற்றிருக்கும். மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.